தோழர் என்.சங்கரய்யாவின் 102-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு சிபிஎம் தலைவர்கள் நேரில் சென்று வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுப்பெரும் தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவருமான தோழர் என். சங்கரய்யாவின் 102-ஆவது பிறந்த தினத்தையொட்டி இன்று (15.07.2023) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் மற்றும் டி.கே. ரங்கராஜன், ப. செல்வசிங், என். குணசேகரன், எஸ். கண்ணன், ப. சுந்தரராஜன், பா. ஜான்சிராணி, வெ. ராஜசேகரன் மற்றும் பலர் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.