tamilnadu

img

தோழர் கே.வரதராசன் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை,மே 17- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் தோழர் கே.வரத ராசன் மறைவுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்  இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும், தற்போது மத்தியக் குழுவின் சிறப்பு அழைப்பாளராகப் பொறுப்பு வகித்து வந்தவருமான தோழர் கே.வரதராசன் அவர்கள் கரூரில் திடீரென்று மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானேன். அவரது மறைவிற்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங் கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பேரிய க்கத்தில் சேர்ந்து 50 ஆண்டுகள் ஆன நிலையில் மறைந்திருக்கும் அவர், பழகுவதற்கு மிகவும் எளிமையானவர். நெருக்கடி நிலையை எதிர்த்து - ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் போராட்டத்தில் இரு வருடங்கள் தலை மறைவு வாழ்க்கை நடத்தி - பிறகு கைது செய்து சிறையில் அடைக்கப் பட்டவர்.

விவசாயிகள் மற்றும் - விவ சாயத் தொழிலாளர்களின் உரிமை களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர்  தோழர் கே.வரத ராசன். தற்போதும் கூட, அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் துணைத் தலைவராக  இருந்தார். கம்யூனிசக் கொள்கையை இத யத்தில் ஏந்தி - ஏழை எளியவர் களுக்கும், விவசாயிகளுக்கும், விய ர்வை சிந்திப் பாடுபடும் பாட்டாளி  வர்க்கத்தினர்க்கும், தனது வாழ்நாள்  முழுவதும் அர்ப்பணிப்பு மனப் பான்மை கொண்டு, இன்முகத்துடன் பணியாற்றிய அவரது திடீர் மறைவு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குப் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் மகன், மகள் மற்றும் குடும்பத்தினருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்க லையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள் ளார். முன்னதாக, மார்க்சிஸ்ட் கட்சி யின் மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணனை தொலைபேசி மூலம்  தொடர்புகொண்டு இரங்கல் தெரி வித்தார்.