tamilnadu

img

ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தவர்களுக்கு டிசம்பரில் போட்டித்தேர்வு  

ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தவர்களுக்கு வரும் டிசம்பரில் போட்டித்தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.  

தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க தமிழக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு 13 ஆயிரத்து 391 ஆசிரியர்களை தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்வதற்கு சில நாட்களுக்கு முன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் என்று 3 வகையான ஆசிரியர்களை நியமனம் செய்ய அறிவுறுத்தப்பட்டது.  

இதையடுத்து, ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களை நிரந்தர ஆசிரியர்களாக நியமிக்கக்கோரி ஏராளமான ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தமிழக அரசு ஆசிரியர்களை நியமிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தது.  

தொடர்ந்து ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அட்டவணையையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகஸ்ட் மாதம் 25 முதல் 31 வரை உள்ள தேதிகளில் தாள்-1க்கு மட்டும் முதற்கட்டமாக தேர்வுகள் கணினி வழியில் மட்டுமே நடத்தப்பட உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த கணினி வழித்தேர்விற்கு, தேர்வர்கள் பயன்பெறும் வகையில் பயிற்சி தேர்வு நடத்தவும் வாரியம் திட்டமிட்டுள்ளது.  

இந்த நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்தவர்களுக்கு போட்டித்தேர்வு வரும் டிசம்பரில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

டெட் தேர்வுக்கு பிறகு, வேலை பெற மற்றொரு போட்டித்தேர்வை எதிர்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.