சென்னை:
அனைத்து சட்டமன்ற கட்சிகள் கூட்டத் தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, எம்எல்ஏ-க்கள் ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்கு முன் கூட்டினார். அப்போது ஆலோசனை வழங்க எம்எல்ஏ-க்கள் குழு அமைக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அதன்படி கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த ஆலோசனை வழங்க முதலமைச்சர் தலைமையிலான எம்எல்ஏ-க் கள் ஆலோசனை குழு அமைக்கப் பட்டுள்ளது.இந்த குழுவில் ஒவ்வொரு கட்சியில் இருந்தும் ஒரு எம்எல்ஏ இடம் பெற்றுள்ளனர்.திமுக எழிலன், அதிமுக சி. விஜயபாஸ்கர், சிபிஎம் வி.பி.நாகை மாலி, காங்கிரஸ் முனிரத்தினம், மதிமுக சதன் திருமலைக்குமார், விடுதலை சிறுத்தைகள் பாலாஜி.சிபிஐ டி.ராமச்சந்திரன், மனிதநேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா, கொமதேக ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி டி. வேல்முருகன், பாஜக நயினார் நாகேந்தின், பாமக ஜி.கே. மணி, புரட்சி பாரதம் ஜெகன் மூர்த்தி ஆகிய 13 பேர் இந்த குழுவில் இடம்பிடித்துள்ளனர்.இந்த ஆலோசனை குழு கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து அவ்வப்போது கூடி ஆலோசிக்கும்.