சென்னை,டிச.17- அண்ணா பல்கலைக்கழ கத்தின் கீழ் உறுப்பு கல்லூரி கள் இயங்கி வருகின்றன. இந்நிலை யில் அண்ணா பல்கலைக் கழகத்தை இரண்டாக பிரித்து ஒன்றை ஆய்வு பல்கலைக்கழக மாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தற்போதைய பல்கலைக்கழகம், மத்திய அரசின் சிறப்பு அந்தஸ்துடன் செயல்படும். அண்ணா பல்கலைக்கழ கத்தை இரண்டாக பிரிப்பதற் கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்ய 5 அமைச்சர்கள் அடங்கிய குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. பின்னர் அமைச்சர்கள் குழுவின் பரிந்துரை அடிப்படையில் தமிழக அரசு முடிவு செய்யும் என்று கூறப்படுகிறது.