தருமபுரி, ஆக.2- துப்பரவு பணியை தனி யாருக்கு தாரைவார்ப்பதை கண்டித்து வெள்ளியன்று தருமபுரி நகராட்சி அலுவ லகம் முன்பு சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. தருமபுரி நகராட்சியில் மக்கள் தொகைக்கு ஏற்ப நிரந்தர துப்புரவு தொழி லாளர்கள் நியமிக்கப் படவில்லை. இதனால் நகர்ப்பகுதியில் அதிகளவில் குப்பைகள் தேங்கி சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. மேலும், பொதுமக்கள் பல்வேறு நோய் தொற்றுகளுக்கு ஆளாகி வருகின்றனர். அதேநேரம், தற்காலிகமாக நியமிக்கப் பட்டுள்ள ஒப்பந்த தொழிலாளர்கள் நகரை தூய்மைப்படுத்தும் பணியை மேற் கொண்டு வருகின்றனர். இவர்களை நிரந்தரப்படுத்தும் நடவடிக்கையை மேற் கொள்ளாமல் நகராட்சி நிர்வாகம் துப்புரவு பணியை தனியாரிடம் தாரைவார்க்க டெண்டர் விட்டுள்ளது. இதனை கண்டித்தும், நகராட்சி நிர் வாகம் துப்புரவு பணியை தனியாருக்கு தாரைவார்க்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். தற்காலிகமாக பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்களுக்கு பணியில் முன்னுரிமை வழங்கவேண்டும். அர சாணை 2டி, எண்.62-ன் படி நாள் ஒன்றுக்கு ரூ.509 சம்பளம் வழங்க வேண்டும். நிரந்தர தன்மையுள்ள தொழிலில் காண்ட்ராக்ட் முறையை புகுத்தக்கூடாது என வலியுறுத்தி வெள்ளியன்று தருமபுரி நகராட்சி அலுவலகம் முன்பு சிஐடியு தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் சி.கலாவதி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் சி. நாகராசன், மாவட்டத் தலைவர் ஜி.நாக ராஜன், உள்ளாட்சி தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.செல்வம் மற்றும் நிர்வாகிகள் சி.குட்டியப்பன், எம்.ராஜேந் திரன், எம்.வெங்கடேசன், எம்.சங்கர், மாதையன் உள்ளிட்ட பலர் கோரிக்கை களை விளக்கி பேசினர். மாவட்டப் பொரு ளாளர் ஆர்.வெங்கட்ராமன் நன்றி கூறி னார்.