tamilnadu

img

கழிவுநீரால் மாசடையும் சின்னசேலம் ஏரி விவசாயம், நிலத்தடி நீர் பாதிப்பால் பொதுமக்கள் அவதி

கழிவுநீரால் மாசடையும் சின்னசேலம் ஏரி விவசாயம், நிலத்தடி நீர் பாதிப்பால் பொதுமக்கள் அவதி

கள்ளக்குறிச்சி, ஜன.1-  கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் பேரூராட்சிப் பகுதியில் வேகமாக ஏற்பட்டு வரும் நகர்ப்புற வளர்ச்சியால், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 355 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி கடும் சுகாதார சீர்கேட்டைச் சந்தித்து வருகிறது. சின்னசேலம் பேரூராட்சிக்கு உட்பட்ட அம்சாகுளம், விஜயபுரம், காந்தி ரோடு, மூங்கில்பாடி ரோடு, மேட்டுத் தெரு, கடை வீதி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட பகுதிகளில் இருந்து வெளியேறும் ஒட்டுமொத்தக் கழிவு நீரும், முறையான சுத்திகரிப்பு இன்றி நேரடியாக ஏரியில் கலப்பதே இதற்கு முக்கிய காரணமாகும். பாண்டியங்குப்பம் சாலை மற்றும் அம்சாகுளம் அருகே அமைக்கப்பட்ட வடிகால் கட்டமைப்புகள் பராமரிப்பின்றி வீணாகிவிட்டதால், குடியிருப்புகளின் செப்டிக் டேங்க் கழிவு களும் ஏரியில் கலந்து விவசாய நிலங்களை நஞ்சாக்கி வருகின்றன. இந்த ஏரி நீரை நம்பியுள்ள 1,000-க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்படை வதுடன், 5 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் கிணறுகளும், குடியிருப்புகளில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளும் கழிவுநீர் கலப்பால் பயன்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. மேலும், தெருக்களில் உள்ள சாக்கடை கால்வாய்கள் முறை யாகப் பராமரிக்கப்படாததால் கழிவுநீர் சாலைகளில் வழிந்தோடி வாகன ஓட்டிகளுக்கு இடையூறு விளைவிப்ப தோடு, துர்நாற்றம் மற்றும் தொற்றுநோய் அபாயத்தையும் ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக மழைக்காலங்களில் கழிவுநீர் வீடுகளுக்குள் புகுந்து மக்களின் வாழ்வாதாரத்தைச் சிதைப்பதால், மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலை யிட்டு நவீனக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்து ஏரியையும், பொதுமக்களின் சுகாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும் எனப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.