சென்னை:
திமுக அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ். பாரதிக்கு அரசு தலைமை வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
திமுக அமைப்பு செயலாள ரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி, கடந்த பிப்ரவரி மாதம் அன்பகத்தில் கலைஞர் வாசகர் வட்டம் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியபோது, ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக சர்ச்சை எழுந்தது.இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டார். அவர் மீது வன் கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். பின்னர் அவர் இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இதற்கிடையே, அந்த நிகழ்ச்சியில் நீதிபதிகளை அவமதிக் கும் வகையில் பேசியதாக ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கேட்டு அரசு தலைமை வழக்கறிஞரிடம் வழக்கறிஞர் அந்தோணி ராஜ் மனு அளித்திருந்தார்.அந்தோணிராஜின் மனுவை காணொலி மூலம் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் மே 29 அன்று விசாரித்தார். பின்னர், இந்த மனு தொடர்பாக 2 வாரத்தில் பதிலளிக்கும்படி ஆர்.எஸ்.பாரதிக்கு நோட்டீஸ் அனுப்பினார்.