ஆளுநர் ரவியைச் சந்தித்த முதல்வர் மு.க. ஸ்டாலின்!
சென்னை, மார்ச் 7 - மேற்கு வங்கத்திற்கு மாற்றப்பட்ட ஆளுநர் ஆர்.என். ரவியை, தமிழக முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் மரி யாதை நிமித்தமாக சனிக்கிழமையன்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரி வித்தார். சென்னை கிண்டியில் உள்ள ‘மக்கள் மாளிகை’ க்கு (மார்ச் 7) சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை உயர் நீதிமன்றத்தின் 55-வது தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றுள்ள சுஷ்ருத் அரவிந்த் தர்மதிகாரியை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரி வித்தார். அதைத் தொடர்ந்து, மேற்கு வங்கத்திற்கு மாற்றப் பட்டுள்ள ஆளுநர் ஆர்.என். ரவியையும் முதலமைச்சர் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். தமிழ்நாடு அரசு சார்பில் நினைவுப் பரிசு வழங்கினார். அமைச் சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட் டோர் உடனிருந்தனர்.
அரசுப் பள்ளி தூய்மைப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு
சென்னை, மார்ச் 7 - அரசுப் பள்ளிகளில் பணி புரியும் தூய்மை பணியாளர் களுக்கான ஊதியம் உயர்த்தப்படுவதாக அறி விக்கப்பட்டுள்ளது. இதன் படி ரூ. 500 முதல் ரூ. 1,500 வரை ஊதியத்தை அதிக ரித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள் ளது.இதன் மூலம் 30,000-க்கும் அதிகமான தூய்மைப் பணியாளர்கள் பயன்பெறுவர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்
சென்னை, மார்ச் 7- சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் உதவி ஆய்வாளர் கே.எம்.பிரவீனா தலைமையிலான குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து விசாரணை நடத்திய போது, அவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ரமேஷ் பெகரா என்பதும், அவரது பையை சோதனை செய்தபோது அதில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள 4 கிலோ கஞ்சா இருப்பதும் தெரியவந்தது. மேலும் அவர் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் இருந்து கஞ்சாவை வாங்கி, பாலக்காட்டுக்கு கொண்டு செல்ல இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு, போதை பொருள்
உரிமைத் தொகை ரூ. 2 ஆயிரமாக உயர்த்தப்படும்: முதல்வர் அறிவிப்பு
சென்னை, மார்ச் 7 – உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு வாழ்த்து தெரிவித்த தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சட்ட மன்றத் தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு மகளிர் உரிமைத் தொகை 2,000 ரூபாயாக உயர்த்தப்படும் என அறிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு, குடும்பத்தலைவி களுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. இத்திட்டம் பெண்களின் பொரு ளாதாரச் சுதந்திரத்தை மேம்படுத்தவும், அவர்களின் குடும்பப் பொறுப்புகளைச் சமாளிக்கவும் உதவும் என அரசு தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில், உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வெளியிட்ட வாழ்த்துச் செய்தி யில், முதலமைச்சர் ஸ்டாலின் இத்திட்டத் தின் பயன்களை மேலும் விரிவுபடுத்தும் வகையில் உரிமைத் தொகையை உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளார். இத்திட்டத் தின் மூலம் பெண்கள் மேலும் பயனடை வார்கள் என்றும், அவர்களின் வாழ்வாதா ரம் மேம்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரி வித்துள்ளார்.
ஏழைகளுக்கான ‘கலைஞர் கனவு இல்லம்’ 5 ஆண்டுகளில் ரூ.19,694 கோடியில் 4,29,394 வீடுகள் கட்டி முடிப்பு!