tamilnadu

img

இதழியல் கல்வி நிறுவனத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை நகரில் புதிதாக நிறுவப்பட்ட இதழியல் கல்வி நிறுவனத்தை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
சென்னை கோட்டூர்புரத்தில் தமிழ்நாடு அரசின் சென்னை இதழியல் கல்வி நிறுவனம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற தொடக்கவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த இதழியல் நிறுவனத்தில் 2025-2026-ஆம் கல்வியாண்டு முதல் இதழியல் துறையில் முதுநிலை பட்டயப்படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. அச்சு, தொலைக்காட்சி மற்றும் வானொலிகளில் பணிபுரிய வாய்ப்பு அளிக்கும் வகையில் பாடத்திட்டம் உள்ளது.
தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் இதழியல் கல்வி பயிற்றுவிக்கப்படும் வகையில் பாடத்திட்டமும் இதழியலுடன் இணைந்த டிஜிட்டல் மீடியா பயிற்சியும் வழங்கப்படுகிறது. இது தமிழ்நாட்டில் திறமையான பத்திரிகையாளர்களை உருவாக்க உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.