சென்னை:
சென்னை சென்ட்ரல்-விசாகப்பட்டினம் சிறப்பு ரயில் உள்பட 9 சிறப்பு ரயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
விசாகப்பட்டினம்-சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (02007) ஜூலை 23 ஆம் தேதி முதல் காலை 7.50 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும். இதுபோல, விசாகப்பட்டினம்-சென்னை சென்ட்ரல் வாராந்திர சிறப்பு ரயில் (02869) ஜூலை 19ஆம் தேதி முதல் காலை 7.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்து சேரும்.புவனேஸ்வரம்-சென்னை சென்ட்ரல் வாராந்திர சிறப்பு ரயில் (02839) ஜூலை 22 ஆம் தேதி முதல் காலை 7.50 மணிக்கு சென்ட்ரலை வந்து சேரும். பிலாஸ்பூர்-சென்னை சென்ட்ரல் வாராந்திர சிறப்பு ரயில் (08231) காலை 7.50 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும். இந்த ரயிலுக்கான நேரம் மாற்றம் ஞாயிற்றுக் கிழமை முதல் அமலுக்கு வந்தது.திருப்பதி-சென்னை சென்ட்ரல் இடையேயான சிறப்பு ரயில் (06096) தினசரி இரவு 10.5 மணிக்கு சென்ட்ரலை வந்து சேரும். இந்த ரயிலின் நேரம் மாற்றம் ஞாயிற்றுக்கிழமை முதல் அமலுக்கு வந்தது.மைசூரு-சென்னை சென்ட்ரல் தினசரி சிறப்பு ரயில் (06022) காலை 6.45 மணிக்கு சென்னை சென்ட்ரலுக்கு வந்தடையும். இந்த ரயிலின் நேரம் மாற்றம் அமலுக்குவந்துவிட்டது.
ஜோலார்பேட்டை-சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் (06090) தினசரி காலை 9.10 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்துசேரும். இந்த ரயிலின் நேரம் மாற்றம் ஞாயிற்றுக்கிழமை முதல் அமலுக்கு வந்தது.சென்னை சென்ட்ரல்-நிஜாமுதீன் வாராந்திர சிறப்புரயில் (06151) வரும் செப்டம்பர் 4 ஆம்தேதி முதல் காலை 6 மணிக்கு சென்னை சென்ட்ரலிலிருந்து புறப்பட்டுச் செல்லும். சென்னை சென்ட்ரல்-நிஜாமுதீன் வாரம் இருமுறை சிறப்பு ரயில் (02269) செப்டம்பர் 3ஆம் தேதி முதல் காலை 6.35 மணிக்கு சென்னை சென்ட்ரலிருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.