tamilnadu

img

பொதுத்துறை வங்கிகளின் சேவை நேரம் மாற்றியமைப்பு

சென்னை, அக். 2- பொதுத்துறை வங்கிகளின் வாடிக்கை யாளர் சேவை நேரம் காலை 10 மணி முதல்  மாலை 4 மணி வரை மாற்றி அமைக்கப் பட்டுள்ளது. இந்திய வங்கிகள் சங்கம் பொதுத்துறை வங்கிகளின் வாடிக்கையாளர் சேவை நேரத்தை நாடுமுழுவதும் ஒரே மாதிரி மாற்றி  அமைக்கும்படி அனைத்து மாநிலங்க ளுக்கும் கடந்த ஆகஸ்டு மாதம் ஒரு சுற்ற றிக்கை அனுப்பியது. அந்த அறிக்கையில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை, காலை 10 மணி முதல் 4 மணி வரை, காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை என 3 வகையாக வாடிக்கையாளர் நேரத்தை அறி வித்து இதில் ஏதாவது நேரத்தை தேர்ந்தெ டுக்கும்படி கேட்டுக்கொண்டது. இந்த சுற்றறிக்கையின் அடிப்படையில் தமிழக அளவிலான வங்கியாளர்கள் குழு  கூட்டம் கடந்த மாதம் 26-ந்தேதி சென்னை யில் நடைபெற்றது. இதில் தமிழகத்தை சேர்ந்த அனைத்து பொதுத்துறை வங்கிகள் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கிகளின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து பொதுத்துறை வங்கிகளும் தங்க ளது வாடிக்கையாளர் சேவை நேரத்தை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை  ஒரே மாதிரியாக இருக்கும்படி மாற்றி அமைப்பது என முடிவு செய்யப்பட்டது. இந்த  புதிய திட்டம் தமிழகத்தில் உள்ள அனைத்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கிகளிலும் செவ்வா யன்று  முதல் அமலுக்கு வந்தது. மற்ற வங்கி களிலும் இந்த புதிய நடைமுறை விரைவில் அமலுக்கு வரும் என தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. மாற்றி அமைக்கப் பட்டுள்ள இந்த புதிய விதிமுறையின்படி வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக 30 நிமிட சேவை நேரம் நீட்டிக்கப்படுகிறது என்பது  குறிப்பிடத்தக்கது.