சென்னை பெரம்பூர்-மாதவரம் நெடுஞ்சாலையில் உள்ள பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் தேர்வு எழுதிய 10ஆம் வகுப்பு மாணவிகள் 333 பேரில் 95 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆட்டோ தொழிலாளி மலைச்சாமி-சாரதா தம்பதியரின் மகள் பள்ளியில் முதல் மாணவியாக வந்துள்ளார். அவரை பள்ளியின் துணை தலைமை ஆசிரியர் குலாம் தஸ்தகீர் பாராட்டினார்.