tamilnadu

img

சென்னை கிங்ஸ் அரசு மருத்துவமனையில் பத்திரிகையாளர்களுக்கு ஆக்சிஜனுடன் கூடிய 25 படுக்கைகள் ஒதுக்கீடு.... நல்வாழ்வு துறை அமைச்சருக்கு டி.யு.ஜே நன்றி.....

சென்னை:
சென்னை கிண்டியில் உள்ள அதி நவீனகிங்ஸ் இன்ஸ்டிடியூட் அரசு மருத்துவமனையில் பத்திரிகையாளர்களுக்கு ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 25 படுக்கைவசதிகள் ஏற்படுத்தி உள்ளதாக அறிவித்துள்ள தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்துக்கு  தமிழ்நாடு யூனியன்ஆப் ஜர்னலிஸ்ட் மாநில தலைவர் பி.எஸ்.டி.புருஷோத்தமன் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பெரும் தொற்றின் முதல் அலையின்போது முன்களப் பணியாளர்களான பல்வேறு பத்திரிகையாளர்கள்  களப்பணியில் ஈடுபட்டபோதுபெரும் தொற்றுக்கு  ஆளாகி பலியானார்கள்.அவர்களது குடும்பத்தாரும் பெரும் தொற்றால்பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.அப்பொழுதிலிருந்தே பத்திரிக்கையாளர்களை முன்களப் பணியாளர்களாக அங்கீகரித்து அவர்களுக்கு உரிய சிறப்பு சலுகைகளை வழங்குமாறு தமிழக அரசை தொடர்ந்து  டி.யு.ஜே உள்ளிட்ட இதர சங்கங்கள், அமைப்புகள் வலியுறுத்தி வந்தன.

ஆனால், அந்த கோரிக்கைகளை கடந்தகால அரசு முற்றிலும் புறம் தள்ளி விட்டது.இந்நிலையில், தமிழக முதல்வராக பொறுப்பேற்கும் முன்பே முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல்  அறிவிப்புகளில் ஒன்றாக பத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப் பணியாளர்களாக அங்கீகரிக்கப்பட்டு அதற்குரிய அத்தனை சலுகைகளையும் பெறுவார்கள் என்று அறிவித்திருந்தார்.இந்நிலையில், கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்படும்  பத்திரிகையாளர்களுக்கு தற்போது சென்னை கிண்டி கிங்ஸ் இன்ஸ்டிடியூட் அதிநவீன மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுள்ள 25 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக , மருத்துவமனையை ஆய்வு  செய்தபோது தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறினார்.

இந்த அறிவிப்பை டி.யு.ஜே முழு மனதுடன் வரவேற்கின்றது. மேலும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்துக்கும் இதயப்பூர்வ நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.இதேபோல் சென்னை ராஜீவ்காந்தி அரசு  மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றிலும் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகளை பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்திற்குஏற்படுத்தி தர வேண்டும்.மேலும் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள், வட்டார அளவில் உள்ள மருத்துவமனைகளில் பத்திரிகையாளர்களுக்கு ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளை ஒதுக்கி தரவேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.