சென்னை:
சென்னை அண்ணா சாலையில் உள்ள வணிக வளாகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
சென்னை அண்ணா சாலையில் உள்ள சாந்தி தியேட்டருக்கு அருகில் தனியார் வணிக வளாகம் உள் ளது. இங்கு 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்நிலையில் வியாழக்கிழமை மதியம் 12 மணியளவில் அந்த வளாகத்தின் மூன்றாவது தளத்தில் இருக்கும் கணினி விற்பனை செய்யும் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. 4 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.அந்த கட்டடத்தில் இருக் கும் நபர்களை வெளியேற் றும் பணியில் 30 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். கொரோனா பொதுமுடக்கத் தின் போது இங்கு அனைத்து நிறுவனங்களும் பூட்டப்பட்டிருந்தன. சமீபத்தில் பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அளிக்கப்பட்டவுடன் இந்த நிறுவனங்கள் செயல் படத் தொடங்கியுள்ள நிலையில் இந்த தீ விபத்து நடைபெற்றுள்ளது குறிப்பிடத் தக்கது.