tamilnadu

img

ஊடகங்கள் மீது பாயும் மத்திய உள்துறை.... தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கம் கடும் கண்டனம்

சென்னை:
தில்லியில் நடைபெற்ற வன்முறைகளை படம்பிடித்து நேரடி ஒளிபரப்பு செய்த ஏசியாநெட் நியூஸ்,  மீடியா 1 சேனல் ஆகியவற்றிக்கு தடை விதித்த மத்திய அரசின் செயலானது, அந்த வன்முறையை தடுக்க தவறிய தோல்வி பயத்தால் வந்த விளைவாகும் என்று டி.யூ.ஜே. கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு  பத்திரிக்கையாளர்கள் சங்க(டி.யூ.ஜே.) மாநிலத் தலைவர் பி.எஸ்.டி.புருஷோத்தமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தில்லியில்  நடைபெற்ற வன்முறைகளால்50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.பலர்துப்பாக்கிச்சூட்டிற்கு ஆளாகி கவலைக்கிடமான நிலையில் இன்றும் சிகிச்சையை தொடர்ந்து வருகின்றனர். இந்த தாக்குதலில் 5 ஊடகம் மற்றும் பத்திரிகையாளர்கள் கடுமையாக தாக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்தியாவின் இதயபகுதியான தில்லியில் நடைபெற்ற இந்த கோர வன்முறைகளைஒடுக்காமல், தில்லி காவல்துறையும் அதனுடைய தலைமை பீடமான உள்துறையும் வேடிக்கை பார்த்தது இதன் உச்சக்கட்டம். இதற்கு தார்மீகப் பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தன்னுடைய பதவியைராஜினாமா செய்திருக்க வேண்டும். இந்த கோர வன்முறையை தடுக்க தவறிய மத்திய அரசு, தங்களுடைய இயலாமையை மறைக்க ஊடகங்கள் மீது பழியைப்போட்டு தப்பிக்க பார்க்கிறது. இந்த வன்முறைச்சம்பவங்களையும், துப்பாக்கிச் சூடுகளையும், சொத்துக்கள் சூறையாடப்பட்டதையும், குடியிருப்புக்கள் கொளுத்தப்பட்டதையும், மக்களின் முன் அம்பலப்படுத்திய ஏசியா நெட் நியூஸ்மற்றும் மீடியா 1 சேனல் உள்ளிட்ட அனைத்துஊடகங்களுக்கும், அனைத்து ஊடகவியலாளருக்கும் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம்  (டியூஜே) தனது பாராட்டுகளையும்,வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறது.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.