tamilnadu

‘பேக்கேஜ் சிஸ்டம்’ரத்து... சிறு ஒப்பந்ததாரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.... சட்டபேரவையில் அமைச்சர் அறிவிப்பு...

சென்னை:
நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணிகளை ஒரு கோட்டம் முழுவதும் தொகுத்து பெரும் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் விடப் பட்ட ‘பேக்கேஜ் சிஸ்டம்’ அடியோடு ரத்து செய்து சிறு சிறு ஒப் பந்தார்கள் பயன்பெரும் வகையில் இனி ஒப்பந்தங்கள் நடைபெறும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.சட்டப்பேரவையில் நெடுஞ் சாலை மற்றும் பொதுப்பணிகள் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. அப் போது காஞ்சிபுரம் தொகுதி திமுக உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன் பேசும்போது,“ கடந்த ஆட்சியில் கிராம சாலைகளை தரம் உயர்த்த வில்லை என்று குற்றம் சாட்டியதோடு, அந்த ஆட்சியில் பின்பற்றப்பட்டு வந்த தொகுப்பு முறையிலான ஒப்பந்தம் “பேக்கேஜ் சிஸ்டம்” குறித்து சில கருத்துக்களை தெரிவித்து அந்த நடைமுறை ரத்து செய்யப்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

அப்போது குறுக்கிட்ட எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி,“ தொகுப்பு முறையிலான ஒப்பந்தம் பேக்கேஜ் சிஸ்டத்தின் படி சாலைப் பணியை ஒப்பந்தம் எடுப்பவர் தொடர்ந்து ஐந்து ஆண்டு காலம் அந்த சாலையை பராமரிக்க வேண்டும் என்ற அடிப்படையில் இ-டெண்டர் விடப்பட்டது. தகுதியுள்ள அனைவரும் பங்கேற்றனர்” என்றார்.இதற்கு பதில் அளித்த நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு,“ முந்தைய அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பேக்கேஜ் சிஸ்டம் உள்ளூர், மாவட்டம், வெளி மாவட்ட அளவில் தகுதியுள்ள சிறு, சிறு ஒப்பந் தர்களை பெரிதும் பாதித்தது. மாநில அளவிலான ஒப்பந்ததார்களுக்குகூட பணி கிடைக்கவில்லை. சிறு சிறு பணிகளாக செய்ய வேண்டியதை ஒட்டுமொத்தமாக ஒரே நிறுவனத்துக்கு ரூ.500 முதல் ரூ.800 கோடி வரைக்கும் ஒப்பந்தம் விடப்பட் டது. இதில் முகம் தெரியாதவர்கள் ஒப்பந்தம் மொத்தமாக டெண்டர் எடுத்துக்கொண்டு அடையாளமே தெரியாதவர்களுக்கு பிரித்துக் கொடுத்த வந்தனர். இதனால், சாலைப் பணியாளர்கள், ஆய்வாளர்கள், கிரா மப்புற பணியாளர்கள் என பலரும்வேலை இழந்தனர். வேலை யில்லா திண்டாட்டம் அதிகரித் தது.  இதுகுறித்து ஏராளமான புகார் வந்துள்ளது. எனவே, அந்த பேக்கேஜ் சிஸ்டம் இன்று முதல் ரத்து செய்யப்படுகிறது.

இனிமேல், பல சாலைகளைஒன்றிணைத்து விடப்பட்ட ஒப்பந்தமுறை இருக்காது. சிறு சிறு ஒப்பந்த தாரர்கள் அதிகமாகடெண்டரில் கலந்து கொள்வார்கள். இதனால் குறைந்த அளவுக்கு விலைப் புள்ளிகள் கிடைக்கும் அரசுக்கும் நிதி வருமானம் கிடைக்கும். உள்ளூர் மற்றும்  மாவட்ட அளவில் உள்ளசிறு ஒப்பந்ததாரர்களுக்கும் அந்தஅந்தப் பகுதி மக்களுக்கும் வேலை கிடைக்கும். அதன் மூலம்வருமானம் கிடைக்கும்” என் றார்.பின்னர் புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார். அதன்படி, கட்டட கட்டுமானங்களில் பிரதானமாக பயன்படுத்தப்படும் நொறுக் கப்பட்ட கல் மணல் அல்லது தயாரிக்கப்பட்ட மணல் (எம். சாண்ட்) தரத்தை உறுதி செய்ய தனியாரால் விற்கப்படும் எம்.சாண்ட் பரிசோதனை செய்து தரமற்ற என் சான்றனை கண்டறிந்து கட்டுப் படுத்த நடவடிக்கை மேற்கொள் ளப்படும்.அனைத்து அலுவலக நடவடிக்கைகளும் கணினி மயமாக் கப்பட்டு கைபேசி மூலம் கண் காணிக்க உரிய திட்டம் செயல் படுத்தப்படும். சென்னை மற்றும் திருச்சி மண்டலங்களை மறு சீரமைத்து கோயம்புத்தூரில் தலைமையிடமாகக் கொண்டு ஒரு கூடுதல் மண்டலம் உருவாக்கப்படும்.

ஒப்பந்ததாரர் பதிவு ஆண் டுக்கு ஒரு முறை புதுப்பித்தல் என்பதிலிருந்து மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை என மாற்றப்படும். புதிய ஒப்பந்ததாரர் பதிவு மற்றும் புதுப்பித்தல் மண்டல தலைமை பொறியாளர் அளவிலேயே இனி மேற்கொள்ளப்படும்.

புதிதாக சுற்றுலா மாளிகைகள்

புதிய மாவட்ட தலைமையிடங்களான செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், தென்காசி, மயிலாடுதுறை ஆகிய இடங்களில் தலா 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக சுற்றுலா மாளிகைகள் கட்டப்படும்.திருச்சி, கடலூர், நாகை, மதுரை, திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு, ஜமுனாமரத்தூர் ஆகிய 6 இடங்களில் ரூபாய் 38 கோடியில் கூடுதல் சுற்றுலா மாளிகைகள் கட்டி கொடுக்கப்படும். என்றார்.