tamilnadu

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: வாலிபர் சங்கம்

சென்னை:
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ் குமார், மாநிலச் செயலாளர் எஸ்.பாலா ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-
புதுக்கோட்டை மாவட்டம், டி களபம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி கணேசன். இவருக்கு அரிஷ்மா (17) என்ற மகளும், மகனும் உள்ளனர். அரிஷ்மா பட்டுக்கோட்டையில் உள்ள பள்ளியில் இந்த ஆண்டு 12 ஆம்வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார்.இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி மருத்துவராக வேண்டும் என்ற கணவோடு இருந்தார் மாணவி. வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வராததால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டுள் ளார். கடந்த மாதம் நீட் தேர்வு பயத்தால் கோவையை சேர்ந்த மாணவி சுபஸ்ரீ தற்கொலை செய்து கொண்டுள்ளார்.தமிழகத்தில் நீட் தேர்வு பல மாணவர்களின் மருத்துவ கனவை கலைத்துள்ள நிலையில், பல மாணவர்களின் உயிரையும் பறித்து வருகிறது. மாணவி அனிதாவில் துவங்கி அரிஷ்மா வரை நீட் மரணங்கள் தொடர் கதையாகியுள்ளன.

இந்த ஆண்டு கொரோனா பேரிடர் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு மாணவர் அமைப்பு, இளைஞர் அமைப்பு, மாணவர்கள், பெற்றோர்கள், அரசியல் கட்சிகள் என நாடே ஒன்றுபட்ட குரலில் இந்த ஆண்டு நீட் தேர்வை நடத்தக்கூடாது. 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப் படையிலே மருத்துவப் படிப்பில் மாணவர்களை சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளன.இந்த நிலையிலும், மத்தியில் ஆளும் பாஜக அரசு அதை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் நீட் தேர்வை நடத்தியே தீர்வது என்ற சர்வாதிகார மனநிலையில் செயல்பட்டு வருகிறது. இதன் விளைவுதான்  அரிஷ்மா, சுபஸ்ரீ மாணவிகள் மரணம் அடைந்துள் ளனர்.

அதேபோல 1 முதல் 6 வரை ஜேஇஇ தேர்வு நடைபெற்று வருகிறது. குஜராத்தில் நடைபெற்ற தேர்வில் ஏறக்குறைய 45 சதவீத மாணவர்கள் தேர்வில் கலந்து கொள்ளவில்லை என்று செய்திகள் வருகிறது.  இது கொரோனா நோய் குறித்து மாணவர்களின் அச்சத்தை வெளிப்படுத்துகிறது. அனைத்து மாணவர்களும் பங்கேற்க வாய்ப்பில்லாத தேர்வு எப்படி தகுதியான மாணவர் களை ர்ந்தெடுக்க முடியும் என்று கேள்விகள் எழுகிறது.எனவே வரும் 13 ஆம் தேதி நடைபெறும்    நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப் படையிலேயே மருத்துவ படிப்பில் மாணவர்களை சேர்க்க வேண்டும்.இவ்வாறு வலியுறுத்தி உள்ளனர்.