சென்னை, மே 14 -கால்டாக்சிகளுக்கான கட்டணத்தை அரசே நிர்ணயம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு கால்டாக்சி தொழிலாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.தமிழ்நாடு கால்டாக்சி தொழிலாளர் சங்கம் வடசென்னை மாவட்ட முதல்பேரவைக் கூட்டம் செவ்வாயன்று (மே 14) நடைபெற்றது. கூட்டத்திற்கு ஜி.ராஜேஷ் தலைமை தாங்கினார். சம்மேளன பொதுச் செயலாளர் எஸ்.மூர்த்தி துவக்கிவைத்தார். பொருளாளர் வி.குப்புசாமி, தமிழ்நாடு கால்டாக்சி தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் மு.பூபதி, தென் சென்னை மாவட்ட நிர்வாகிகள் ஆர்.மணிகண்டன், எம்.கார்திக், கே.கோபிநாத் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.அகில இந்திய சாலைபோக்குவரத்து சம்மேளன துணைத் தலைவர் ஏ.பி.அன்பழகன் நிறைவுயாற்றினார். பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும், சென்னை மற்றும் புறநகர் டோல்கேட்களில் கால்டாக்சிகளுக்கு கட்டணவிலக்கு அளிக்க வேண்டும்,ஓலா, ஊபர் போன்றகால்டாக்சி நிறுவனங்கள் அவர்களது ஓட்டுநர்களுக்கான பி.எப், ஈஎஸ்ஐ, பண்டிகைகால போனஸ் வழங்க வேண்டும் என்பனஉள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய நிர்வாகிகள்
வடசென்னை மாவட்டத் தலைவராக ஜி.ராஜேஷ், பொதுச் செயலாளராக பி.அரசு, பொருளாளராக மணிகண்டன் உள்ளிட்ட 18 பேர்கொண்ட நிர்வாகக்குழு தேர்வு செய்யப்பட்டது.