சென்னை, ஆக. 22- உடையக் கூடிய எலும்பு நோய் / ஆஸ்டியோஜெனிஸ் இம்பெர்பெக்டா என்பது எளிதில் வளையும் மற்றும் உடையும் தன்மை கொண்ட ஒருவகை மரபணு குறை பாடுள்ள எலும்பு நோயாகும். இது குழந்தைகளுக்கு பிறவியிலேயே மரபணு குறைபாடுள்ள பெற்றோர்க ளிடமிருந்து சுமார் 10,000 குழந்தைகளில் 1 அல்லது 2 குழந்தைகளுக்கு வரக்கூடிய வாய்ப்பு உள்ளது. இந்த நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தை களுடைய எலும்பு வளையம் மற்றும் எளிதில் உடை யக்கூடிய தன்மையுடனும் இருப்பதால் அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் மிகவும் வலியுடனும் நடக்கக்கூட முடியாமலும் மிகுந்த சிரமத்துடன் காணப்படுவார்கள். சென்னை கொள த்தூரைச் சேர்ந்த சரவணன் (6) என்ற சிறுவன் மேற்குறிப்பிட்ட நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதை கண்டறிந்து அச்சிறுவனுக்கு எலும்பை வலுவாக்க பிறந்த 6 மாதம் முதல் 5 வயது வரை பாமிட்ரோநெட் எனும் மருந்து கொடுக்கப்பட்டு எலும்பு வலுவாக்கப்பட்டது. கடந்த மே, ஜூன் மாதங்க ளில் 2 முறை அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள ப்பட்டு வளைந்த தொடை எலும்புகளை தொலை நோக்கி ராடு என்னும் கம்பி வளர வளர விரிவடை யக்கூடிய கம்பி பொருத்த ப்பட்டு கால்கள் நேராக்க ப்பட்டு பயிற்சி அளிக்கப்ப ட்டது. ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 6 மாதமாக முடநீக்கியல் துறையின் மருத்துவர் பசுபதி மற்றும் அவரது குழுவைச் சார்ந்த மருத்து வர்கள் அளித்த தொடர் சிகிச்சையால் நல்ல முறை யில் எந்த துணையும் இல்லா மல் நேரான கால்களுடன் அந்தச் சிறுவன் நன்றாக நடக்கிறான். அவன் தந்தைக்கும் ஒரு காலில் ஏற்பட்ட முறிவு நேராக்கப்பட்டு டெரி பேராடைடு என்னும் மருந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த நவீன சிகிச்சைக்கான தொகை தோராயமாக ரூ.10 லட்சம் ஆகும். இந்த சிகிச்சையின் முழு தொகை யும் முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் முற்றிலும் இலவசமாக செய்யப்பட்டது.