districts

img

எலும்பு முறிவு அறுவை சிகிச்சை: திட்டக்குடி அரசு மருத்துவர்கள் சாதனை

கடலூர், டிச. 10- கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கிழச்செருவாய் கிராம த்தைச் சேர்ந்தவர் மணிவண்ணன் (58). இவர் பைக்கிலிருந்து தவறி விழுந்ததில் வலது தோள்பட்டை எலும்பு 5 பாகமாக உடைந்தது. இதையடுத்து அவர் திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார். தலைமை மருத்துவ அலு வலர் மருத்துவர் சேபானந்தம் தலைமையில் கணினி உதவி யுடன் இயங்கும் ஊடு கதிர்வீச்சு இயந்திர உதவியுடன் பிளேட் பொருத்தும் அறுவை சிகிச்சையை எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை மருத்துவர்கள் ஆனந்த், தினேஷ், கார்த்திக், மயக்க மருந்து நிபுணர் கிருத்திகா, செவிலியர்கள் மகேஸ்வரி, மாலா, லட்சுமி ஆகி யோர் வெற்றிகரமாக செய்து முடித்தனர். திட்டக்குடி அரசு மருத்துவ மனையில் முதன்முறையாக தோள்பட்டை எலும்பு முறிவு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப் பட்டது குறிப்பிடத்தக்கது.