பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தை வழங்கக் கோரி தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்த ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் புதுவையில் உள்ள பொது மோலளர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத் தலைவர் குமார், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் என்.கொளஞ்சியப்பன், சங்க நிர்வாகிகள் சுப்புரமணியன், முருகையன், செல்வம், பிரதிபா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை தனியார்மயமாக்குவதைக் கண்டித்தும், கடந்த 10 மாதமாக ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்தும் ஓசூரில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவல வலளாகத்தில் ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதில் ஊழியர் சங்க செயலாளர் வெங்கடேஷ் நாயுடு, தலைவர் வி.எஸ்.சந்திரன், மாவட்ட உதவி தலைவர் வரதராஜன், ஒப்பந்த ஊழியர் சங்க செயலாளர் நந்தன், மாவட்ட அமைப்பாளர் பன்னீர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.