tamilnadu

4ஜி அலைவரிசையை ஒதுக்கிடுக பிஎஸ்என்எல் ஊழியர்கள் தர்ணா

சேலம், ஜூன் 26- பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி அலைவரிசை ஒதுக் கிடக்கோரி ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடு பட்டனர். மத்திய பாஜக அரசு பொதுத்துறை நிறுவனங்களை படிப் படியாக தனியாருக்கு தாரைவார்க்கும் நிலையை அரங் கேற்றி வருகிறது. அதன் ஒருபகுதியாக பிஎஸ்என்எல் நிறுவ னத்தை சீர்குலைக்கும் வகையில் 4ஜி அலைகற்றை ஒதுக்கீட்டில் தனியாருக்கு முன்னுரிமை வழங்கிவிட்டு பிஎஸ்என்எல் நிறுவனத்தை கைவிரித்து வருகிறது.

இதனை கண்டித்தும், பிஎஸ்என்எல்  நிறுவனத்திற்கு 4ஜி அலைவரிசைக்கான தடைகளை நீக்க வேண்டும். ஊழியர்க ளின் ஊதியம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி வெள்ளியன்று நாடு முழுவதும் பிஎஸ்என்எல் ஊழி யர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்ஒருபகுதியாக, சேலம் மாவட்டத்தில் சேலம், வாழப்பாடி, ஆத்தூர் பகுதிகளில் தனிமனித இடைவெளி யுடன் ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் இ.கோபால் உள் ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தருமபுரி

தருமபுரி மாவட்ட பொதுமேலாளர்  அலுவலகம் முன்பு நடைபெற்ற தர்ணா போராட்டத்தில் பிஎஸ்என்எல் ஊழி யர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.பாஸ்கர், மாவட்ட செயலாளர் பி.கிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.

 நீலகிரி

நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், கோத்தகிரி,கூடலூர் ஆகிய பகுதிகளில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், பிஎஸ்என்எல் ஊழி யர் சங்கத்தின் மாவட்ட உதவி தலைவர் ஏ.கில்பர்ட், மாவட் டப் பொருளாளர் ஜெ.பிரின்ஸ், மாவட்ட உதவி செயலாளர் ஆர்.ரவிக்குமார், தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் மாநில செயலாளர் சி.வினோத், கிளை செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.

கோவை

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் நடைபெற்ற தர்ணா போராட்டத்தில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்ட அமைப்பு செயலாளர் பி.தங்கமணி, மாநில அமைப்பு செயலாளர் நிசார் அகமது, சங்கத்தின் ஒருங்கி ணைப்பாளர் வி.சசிதரன், கிளை செயலாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங் களை எழுப்பினர்.