tamilnadu

பிராட்வே பேருந்து நிலையம் இடமாற்றம் ஜன.24 முதல் புதிய வழித்தடங்கள் அறிவிப்பு

பிராட்வே பேருந்து நிலையம் இடமாற்றம் ஜன.24 முதல் புதிய வழித்தடங்கள் அறிவிப்பு

சென்னை, ஜன.22- சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் மிக முக்கிய முனையமான பிராட்வே பேருந்து நிலையம் நவீன மயமாக்கப்பட உள்ளது. இதையொட்டி, வரும் ஜனவரி 24 முதல் அங்கிருந்து இயங்கும் பேருந்துகள் ராயபுரம் மற்றும் தீவுத்திடல்  தற்காலிக பேருந்து நிலை யங்களுக்கு மாற்றப்படுகின்றன. தீவுத்திடல் பேருந்து நிலையம்: காமராஜர் சாலை வழியாகச் செல்லும் பேருந்துகள் (6, 13, 60E, 102, 21G உள்ளிட்டவை) மற்றும் கடற்கரை சாலை வழியாகச் செல்லும் பேருந்துகள் (1, 4, 44, 56, 57 சீரிஸ் உள்ளிட்டவை) இனி தீவுத்திடலில் இருந்து இயங்கும். இவை முத்துசாமி பாலம் மற்றும் ராயபுரம் தற்காலிக பேருந்து நிலையம் வழியாகச் செல்லும். மண்ணடி வழித்தடம்: 33B, 56C மற்றும் 56F ஆகிய பேருந்துகள் தீவுத்திடலில் இருந்து இயக்கப்பட்டு, எஸ்பிளனேட் சாலையில் நிறுத்தப்படும். ஈ.வி.ஆர் & பெரம்பூர் சாலை: 15, 20, 50, 71, 120 மற்றும் 150 ஆகிய வழித்தடப் பேருந்துகள் டிஎன்பிஎஸ்சி சாலை மற்றும் மாலை சந்தை அருகே நின்று செல்லும். அண்ணா சாலை வழித்தடம்: 11, 21, 26, 52, 54, 60, 18 மற்றும் 88 சீரிஸ் பேருந்து கள் வட கோட்டைச் சாலை வழியாகத் திருப்பி விடப்பட்டு, துறைமுக சட்ட மன்றத் தொகுதி அலுவலகம் அருகே நின்று செல்லும். இந்தத் தற்காலிக மாற்றங்களால் பயணிகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. புதிய பேருந்து நிறுத்தங்கள் மற்றும் மாற்றப்பட்ட வழித்தடங்கள் குறித்துப் பயணிகள் நடத்து நர்களிடமோ அல்லது அந்தந்த பேருந்து நிலைய அறிவிப்பு மையங்களிலோ கேட்டுத் தெரிந்துகொள்ளுமாறு அறி வுறுத்தப்பட்டுள்ளனர்.