சென்னை:
இந்தியாவுக்கான பிரிட்டன் தூதரகத்தின் உயர் ஆணையர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். சென்னை ஆழ்வார்ப்பேட்டையிலுள்ள இல்லத்தில் மு.க.ஸ்டாலினை, தூதரக உயர் ஆணையர் சர் டோமினிக் ஆஸ் குய்த் சந்தித்தார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டது. இந்த சந்திப்பின் போது துணை உயர் ஆணையர் ஜெரிமி பில்மோர் பெட்போர்டு ஆகியோரும் உடனிருந்தனர்.