சென்னை, ஏப்.22-இலங்கை தலைநகர் கொழும்புவில் அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது:-இதுதொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘இலங்கையில் நிகழ்ந்துள்ள குண்டுவெடிப்பு சம்பவங்க ளும், உயிர்ப்பலிகளும் இதயத்தை நொறுக்குகிறது. இதன் பின்னணி யில் உள்ளமதவெறி - இனவெறி உள்ளிட்ட எந்தவிதமான சக்திக ளாக இருந்தாலும் அடையாளம் கண்டு கடும்நடவடிக்கை எடுக்கவேண்டும். மனிதநேயத்திற்கு விடப்பட்ட சவாலை மனிதாபிமான சக்திகள் முறியடிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
பாரிவேந்தர் கண்டனம்
இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் பாரிவேந்தர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இலங்கையில் நடத்தப்பட்ட கோழைத்தனமான இந்தச்சம்பவம், ஒட்டுமொத்த மனிதகுலத் தாலும் ஏற்கமுடியாத காட்டுமிராண்டிச் செயல்” என்று கூறியிருக்கிறார்.
எம்.எச்.ஜவாஹிருல்லா
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா,“ இலங்கையில் நடைபெற்றபயங்கரவாத தாக்குதல்களை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமான உண்மை குற்றவாளிகள் உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்” என்றுகோரிக்கை விடுத்திருக்கிறார்.