புதுதில்லி:
‘ஏபிபி கங்கா’ செய்தித் தொலைக் காட்சியில் பிரதாப்கர் மாவட்டச் செய்தியாளராக பணியாற்றி வந்தவர் சுலாப்ஸ்ரீவஸ்தவா. இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், வஸ்தவாவின் மரணத்தில் பலரும் சந்தேகம்எழுப்பி வருகின்றனர்.
உ.பி.யில் செயல்படும் மதுபான மாபியாவுக்கு எதிராக செய்தி வெளியிட்ட பின்னணியில் தனக்கு கொலைமிரட்டல் வருவதாக ஸ்ரீவஸ்தவா 2 நாட்களுக்கு முன்புதான் பிரதாப்கர் மாவட்டகாவல்துறையிடம் புகார் அளித்திருந் தார்.‘’பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ளமதுபான மாஃபியாவுக்கு எதிரான எனதுசெய்தி ஒன்று ஜூன் 9-ஆம் தேதி எங்களது சேனலில் வெளியானது. இந்தசெய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதன்பின்னர் என்னை சிலமர்ம நபர்கள் பின்தொடர்வதாக தெரிகிறது. எனது செய்தியில் குறிப்பிட்ட மதுபான மாபியாக்கள் என்னை பழிவாங்க அலைகிறார்கள் என சந்தேகிக்கிறேன். இதனால் எனது குடும்பத்தினரும் மிகவும் கவலையடைந்துள்ளனர்” என்று அந்தபுகாரில் ஸ்ரீவஸ்தவா குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், ஸ்ரீவஸ்தவாவின் மரணத்தை முன்வைத்து, இந்திய பத்திரிகை ஆசிரியர் சங்கத்தின் (Editors Guild of India) தலைவர் சீமா முஸ்தபா,பொதுச் செயலாளர் சஞ்சய் கபூர் மற்றும்பொருளாளர் அனந்த் நாத் ஆகியோர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.அதில், பிரதமர் மோடி ‘ஜி7’ மாநாட்டில் பேசிய ஜனநாயகம், வெளிப் படைத்தன்மை ஆகிய முழக்கங்களுக்கு முரணாகவே நாட்டில் அனைத்தும் நடப்பதாகவும், அரசாங்கத்தை விமர்சிக்கும் பத்திரிகையாளர்கள் குறிவைக்கப் படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.“கொரோனா தொற்று விவகாரத்தில் அரசாங்கங்கள் கூறும் அதிகாரப்பூர்வ செய்திகளை மட்டுமே வெளியிட வேண்டும் என்று ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு, ஒன்றிய அரசும், பல மாநில அரசாங்கங்களின் நிர்ப்பந்தம் அளித்துவரும் நேரத்தில் ஸ்ரீவஸ் தவாவின் மரணம் வந்துள்ளது.
மேலும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், இதேகாலத்தில்தான், பத்திரிகையாளர்களை கைது செய்யநியாயமற்ற முறையில் தேசத்துரோகம் மற்றும் யுஏபிஏ போன்ற சட்டங்களை ஆட்சியாளர்கள் பயன்படுத்துகின்றனர்.அரசாங்கத்தை விமர்சிக்கும் ஊடகவியலாளர்கள் மற்றும் கார்ட்டூனிஸ்டுகள் சமூக ஊடகங்களில் குறிவைக்கப்படுகிறார்கள். கேதார்நாத் வழக்கை குறிப் பிட்டு, அண்மையில் பத்திரிகையாளர் வினோத் துவா வழக்கில் உச்ச நீதிமன்றம் வழிகாட்டிய பிறகும், இந்த நாட்டின் சட்டத்தை மீறுகிறார்கள் என்றுபத்திரிகையாளர்கள் குற்றம் சாட்டப்படுகின்றனர். இவை அனைத்தும் ஜி -7 உச்சி மாநாட்டில் சர்வாதிகாரத்திற்கு எதிராக ஜனநாயகம் வளர்த்தெடுப்பது, வெளிப் படைத்தன்மையைக் கடைப்பிடிப்பது என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியவற்றுக்கு முரணாக உள்ளது” என்றுபத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.