tamilnadu

img

பாஜக - அதிமுக கூட்டணியை புறக்கணிப்பீர் எழுத்தாளர்கள், இயக்குநர்கள் வேண்டுகோள்

சென்னை, ஏப். 12-“ஜனநாயகத்தை காப்போம்” என்ற தலைப்பில் கலைஞர்கள், எழுத்தாளர்கள், அறிவுத்துறையினர், பத்திரிகையாளர்கள் பங்கேற்ற கூட்டம் சென்னை அடையாறில் வியாழனன்று (ஏப். 11) நடைபெற்றது. இதில் துணைவேந்தர் வே.வசந்திதேவி, பேராசியர்கள் அ.மங்கை,அ.மார்க்ஸ், சமூக செயற்பாட்டா ளர்கள் ஆழி செந்தில்நாதன், எழிலன்,கவிஞர் சுகிர்தராணி, இயக்குநர்கள் நவீன், பாலாஜி சக்திவேல், ராஜூமுருகன், லெனின்பாரதி, வெற்றி ராஜன், பிரண்ட்லைன் ஆசிரியர் விஜய்சங்கர், பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன், சமூக செயற்பாட்டாளர் விடுதலை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். நிகழ்ச்சியை கவின்மலர் தொகுத்து வழங்கினார்.கூட்டத்தில் கலைஞர்கள், எழுத்தாளர்கள், அறிவுத்துறையினர், பத்திரிகையாளர்கள், விஞ்ஞானிகள், கல்வியாளர்கள் என 265க்கும் மேற்பட்டோர் கையொப்பமிட்ட அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: எதிர்வரும் மக்களவைத் தேர்தல் முன்னெப்போதும் இல்லாத ஒரு நெருக்கடியை மக்கள் முன்னே தோற்றுவித்துள்ளது. பொதுவாக அரசியல் கட்சிகளும் வேட்பாளர் களும் வாக்கு சேகரிக்க பிரச்சாரம்செய்யும்போது குடிமக்கள் தங்கள் அரசியல் தேர்வுகளை வெளிப்படுத்தா மல் இருப்பதே சார்புகளற்ற பொதுமன்றக் கலாச்சாரத்தை வளர்க்க உதவும்.


ஆனால் கடந்த ஐந்தாண்டு களாக மத்தியில் ஆளும் கட்சி,நம் நாட்டின் மக்களாட்சி கலாச்சா ரத்தின் அடிப்படைகளையே ஆபத்திற்குள்ளாக்கியுள்ள நிலையில்; மக்களாட்சியின் தூண்களான நிறுவனங்களெல்லாம் மமதையுடன் சிதைக்கப்படும் நிலையில்; சமூகம் முழுவதும் அச்சமும் வெறுப்பும் பரவும் நிலையில்; குடிமக்கள் வெறுமனே பார்த்துக்கொண்டிருக்காமல் உடனடியாக மக்களாட்சியின் இருப்பைக் காக்க முன்வரவேண்டிய தேவை இருக்கிறது.கடந்த ஐந்தாண்டுகளில் நாம் கண்ட காட்சிகள் நம் தேசத்திற்குப் புதியவை. தாங்கள் உண்ணும் உணவிற்காகவும் வழிபடும் கடவுளுக்காகவும் சாதாரண மக்கள், அதிகாரத்தால் ஆசிர்வதிக்கப்பட்ட கும்பல்களால் கொல்லப்பட்டார்கள். மூளைச்சலவை செய்யப்பட்ட குண்டர்களால் அறிஞர்களும், எழுத்தாளர்களும் படுகொலைசெய்யப்பட்டார்கள். இந்தக் கொலைகளால் வெகுண்ட எழுத் தாளர்களும் கலைஞர்களும் அரசிடமிருந்தும் அரசுசார் அமைப்புகளி லிருந்தும் தாங்கள் பெற்ற பட்டங்களையும், விருதுகளையும் திருப்பி யளித்தார்கள். அரசின் கலாச்சாரஅமைப்புகளிலும் பல்கலைக்கழகங் களிலும் தகுதியற்ற நபர்கள் அரசியல் சார்புகளுக்காக புகுத்தப்பட்டு அவை சீரழிக்கப்பட்டன.


வரலாறு காணாத அளவில் மாநில ஆட்சியில் மத்திய அரசு தலையிடுவதும் தங்கள் மேலாதிக்கத்தை திணிப்பதும் நிகழ்ந்தன. சுற்றுச்சூழலைக் காக்க போராடிய பொதுமக்கள் குரூரத்துடன் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். தான்தோன்றித் தனமான எதேச்சதிகார முடிவுகளால் பொருளாதாரம் நெருக்கடிக்குள்ளாகி ஏழை மக்கள் அவதியுற்றார்கள். சிறு,குறு தொழில்களும் வியாபாரமும் நசிந்தன. மத்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர்கள் பதவி விலகினார்கள். உளவுத்துறை தலைமைக் குள் இருக்கும் விரிசல்கள் வெளிப்படையாக வெடித்து அலங்கோலமான காட்சிகள் அரங்கேறின. உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் நீதிமன் றத்தின் செயல்முறையை பொது வெளியில் கண்டித்தார்கள். அரசு இயந்திரத்திலும் ஊடகத்திலும் மிரட்டல்களும் அச்சுறுத்தல்களும் வாடிக்கையாகின.உலகின் ஐந்தில் ஒரு பங்கு மக்கள்தொகையும் அளப்பரிய பன்மையும் கலாச்சார மூலங்களும் கொண்ட - மக்களாட்சிப் பாதையில் 1950 முதல் சமரசமின்றிப் பயணிக்கும் பெருமைக்குரிய இந்த நாட்டின் குடிமக்கள், இதுவரை வள ர்த்தெடுக்கப்பட்ட மக்களாட்சியின் வேர்கள் அழிக்கப்படுவதை அக்கறை யின்றி பார்த்துக் கொண்டிருக்க முடியாது.


நாங்கள் மீண்டும் வெற்றிபெற்றால் இனிதேர்தல்களே நடக்காது என ஆளுங்கட்சி எம்பி ஒருவரே சூளுரைப்பதையும் பார்க்கிறோம்.மேற்சொன்ன அவலங்களுக்கு காரணமாகிய பாஜக-வின் ஆட்சி மத்தியில் மீண்டும் அமைய அனுமதிக்க வேண்டாம் என தமிழக எழுத்தாளர் களும் கலைஞர்களும் குடிமக்களாகியநாங்கள் மக்களாட்சி மாண்புகளில் நம்பிக்கையுள்ள வாக்காளர்களை வேண்டுகிறோம்.அதன்பொருட்டு எதிர்வரும் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் வாக்களிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொ ள்கிறோம். இனி வரும் காலங்களில் ஆட்சியாளர்கள் மக்களாட்சி நெறி முறைகளை மீறாதிருக்க, நமது உரிமைகளை மறுக்காதிருக்க நாம் குரல் கொடுப்போம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.