tamilnadu

img

மேட்டூர் அணை திறப்புக்கு முன்பாக தூர்வாரும் பணிகளை முடித்திடுக... அரசுக்கு விவசாயிகள் சங்கம் கோரிக்கை

சென்னை:
மேட்டூர் அணை திறக்க ப்படுவதற்கு முன்பாக நூறு சதவீதம் தூர்வாரும் பணிகளை முடித்திட அரசு முனைப்புடன் செயல்பட வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செய லாளர் பெ.சண்முகம் வெளியி ட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: மேட்டூர் அணையில் 100 அடிக்கு மேல் தற்போது தண்ணீர் உள்ளது. எனவே, இந்த ஆண்டு சாகுபடிக்கு ஜுன் 12 ஆம் தேதி தண்ணீர் திறப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. இந்த நிலையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆறுகள், கால்வாய்கள் மற்றும் வாய்க்கால்களில் தூர்வாரும் பணியை போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்துகிறது.

கடந்த காலங்களில் உரிய முறையில் தூர்வாரப்படாததால் கடைமடை பாசன பகுதிகளுக்கு தண்ணீர் சென்று சேராமல் குறித்த காலத்தில் சாகுபடி பணிகளை மேற்கொள்ள முடியாமல் அவசர கோலத்தில் அள்ளித்தெளித்த கதையாக அமைந்ததைச் சுட்டிக்காட்டுகிறோம். தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளர்களை இப்பணிக்கு பயன்படுத்துவதன் மூலம் ஊரடங்கினால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பிலிருந்து அவர்கள் மீள உதவும் என்பதை அரசின் கவனத்திற்கு கொண்டு வருவதுடன், ஜுன் 12 அன்று தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவதற்கு முன்பாக நூறு சதவீதம் தூர்வாரும் பணிகள் முடிக்கப்பட அரசு முனைப்புடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.