சென்னை, ஜூலை 14- மாட்டுக்கறி சூப் அருந்தி யதற்காக பொரவர்சேரி முஸ் லிம் இளைஞர் மீது தாக்கு தல் நடத்திய சங்பரிவார் கும்பலின் அராஜக நட வடிக்கைக்கு தமிழக மக்கள் ஒற்றுமை மேடை கண்டனம் தெரிவித்துள்ளது. மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பின் ஒருங்கிணைப் பாளர்கள் பேராசிரியர் அரு ணன், க.உதயகுமார் ஆகி யோர் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது: வடமாநிலங்களில் தலித் மற்றும்சிறுபான்மை மக்கள் மீது சங் பரிவார் கும்பல் தொடர்ச்சி யாக செய்து வரும் கொலை வெறித் தாக்குதல்கள் அன் றாட நிகழ்ச்சியாக மாறி வரும் நிலையில், தற்போது தமிழகத்திலும் இப்போக்கு தீவிரமாகி வருகிறது. நாகை மாவட்டம் பொர வச்சேரி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் முகமது பைசான் சாலையோரக்கடை ஒன்றில் மாட்டுக்கறி சூப் அருந்தி யுள்ளார். இது ஒன்றும் புதி தல்ல. இந்துக்களில் பலரும் மாட்டுக்கறி சூப் அருந்தி வரு வது அனைவரும் அறிந்ததே. ஆனால் முஸ்லிம் என்ற காரணத்திற்காக அவருக்கு இந்து மக்கள் கட்சியினர் கொலை மிரட்டல் விடுத்த தோடு, அவரை கத்தியால் குத்தி “மாட்டுக்கறி தின்பவ னுக்கு இதுதான் தண்டனை” என்று வெறித்தாக்குதலை நடத்தியுள்ளனர். சங்பரிவார் கும்பல் தமிழ கத்தில் காலூன்றிட இத்த கைய வன்முறை நடவடிக்கை களை கட்டவிழ்த்துவிட்டுள் ளது. இந்து மக்கள் கட்சியின ரின் இத்தகைய கொடுஞ் செயலை தமிழக மக்கள் ஒற் றுமை மேடை வன்மையாக கண்டிக்கிறது. சமூக நல்லிணக்கத்திற்கு அடித்தளமாக திகழும் தமி ழகத்தை தங்கள் அரசியல் நோக்கத்திற்காக பாழ்படுத்த விரும்பும் சங் பரிவார் கும்ப லின் நோக்கத்திற்கு இடம் தராமல் தமிழக அரசு உடனடி யாக தலையிட்டு இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நடை பெறாத வகையில் உறுதி யான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழக மக்கள் ஒற்றுமை மேடை வலியுறுத்துகிறது. இன்று மாட்டுக்கறி உண்ணக்கூடாது என்ப வர்கள் நாளை மாமிச உணவே உண்ணக் கூடாது என்பார் கள். அவர்களைப் பொறுத்த வரையில் “ஒரே நாடு, ஒரே உணவு” எனும் ஒற்றைக் கலாச்சாரத்தை திணிக்க முயல்கிறார்கள். இந்த அடா வடிப்போக்கை எதிர்த்து தமி ழக மக்கள் கண்டன குரலெ ழுப்ப வேண்டும் என்று தமி ழக மக்கள் ஒற்றுமை மேடை வேண்டுகிறது.