tamilnadu

img

மதப் பகைமையை வளர்க்கும் சங்பரிவார்

தமிழக மக்கள் ஒற்றுமை மேடை கண்டனம்

சென்னை, மார்ச் 29- கொரோனா அச்சுறுத்தலையும் மதப் பகைமையை வளர்க்கும் சங்பரி வார் முயற்சிக்கு தமிழக மக்கள் ஒற்றுமை மேடை கண்டனம் தெரி வித்துள்ளது.  இதுகுறித்து தமிழக மக்கள்  ஒற்றுமை மேடையின் ஒருங்கி ணைப்பாளர்கள் பேராசிரியர் அரு ணன், க.உதயகுமார் விடுத்திருக்கும் அறிக்கை வருமாறு:- உலகமே கொரோனா தொற்று நோயால் பேரதிர்ச்சிக்கு உள்ளாகி யிருக்கக்கூடிய சூழ்நிலையில் இந்தி யாவிலும் தமிழகத்திலும் இந்தக் கொரோனாவை தங்கள் மத துவேஷ கருத்துப் பரவலுக்கு சில ஊடகங் களும் தனி நபர்களும் பயன்படுத்தி வருவது அபாயகரமானது; வெட்ககர மானது; மனிதகுலத்திற்கே அவல மான செயலாகும்.

விஷமத்தனம்

சமீபத்தில் தினமலர் செய்திப் பத்தி ரிகையில் இந்தியாவில் கொரானா வைப் பரப்ப 18,500 முஸ்லிம்கள் இந்தியா வந்துள்ளதாகவும் அவர்கள்  மூலம் இந்த நோயை இந்தியர்களுக்கு பரப்ப திட்டமிட்டுள்ளதாக வும் ஒரு  விஷமத்தனமான செய்தி வந்துள்ளது (டீக்கடை பெஞ்ச்). எவ்வித ஆதார மும் இல்லாமல் இத்தகைய ஒரு அவ தூறுச் செய்தியை லட்சக்கணக்கில் விற்பனையாகும் ஒரு நாளேட்டில் பதிவு செய்வது சமூகத்தில் எந்தவித மான பதட்டத்தை உருவாக்கும் என்பதை அறிவோம். அதேபோல சமூக வலைத்தளங்க ளிலும் சங்பரிவார கும்பல் ஏராள மான அவதூறுச் செய்திகளை மீம்ஸ்க ளாக வும் பல்வேறு வகையிலும் பரப்பி வருகின்றனர்.

ஒற்றுமை சீர்குலைவு

இந்தியாவில் முஸ்லிம்கள் இந்த வியாதியால் இறந்தால் அவர்கள் உடலை எரிக்க அனுமதிப்பது இல்லை  என்றும் புதைக்கவே செய்கின்றனர் என்றும், அதனால் அது மற்றவர்க ளுக்குப் பரவ வாய்ப்புள்ளது என்றும்  உலகம் முழுவதும் கொரோனா நோயா ளிகள் இறந்தால் எரிக்கப்பட்டு வரும்  நிலையில் இந்தியாவிலும் தமிழ கத்திலும் முஸ்லிம்கள் அவ்வாறு எரிக்க அனுமதிக் காதது பெரும் கேடு  விளைவிக்கும் என்றும் அவதூறு பரப்பி வருகிறார்கள்.

பதற்றம்...

உண்மையில் பல்வேறு நாடுகளி லும் கொரோனா வியாதியால் இறந்த வர்களைப் புதைப்பதற்கு அவரவர் சார்ந்த மத நடைமுறைப்படி அனு மதிக்கப்பட்டு வரும் நிலையில் தமி ழகத்தில் இதுபோன்ற அவதூறுச் செய்திகளை சமூக வலைதளங்களில் பரப்பி மக்கள் ஒற்றுமையை சீர் குலைத்து மத துவேஷத்தை பரப்பி வருகிறார்கள். தொடர்ந்து உலக மக்கள் அனை வரும் ஒரு இக்கட்டான சூழலை சந் தித்து வரும் வேளையில் இந்தியாவி லும் குறிப்பாக தமிழகத்திலும் இத்தகைய  சங்பரிவார் கும்பல் திட்டமிட்ட வகை யில் இந்த அபாயகரமான சந்தர்ப் பத்தை கூட தங்கள் மத துவேஷ கருத்து பரப்புவதற்கு ஆதரவாக பயன்  படுத்துவது சமுதாயத்தில் மிகப்  பெரிய பதட்டத்தை உருவாக்கிடும்.

வேண்டுகோள்

மத்திய மாநில அரசுகள் கொரோ னாவை வைத்து பத்திரிகை ஊடகங்  கள் மற்றும் சில சமூக வலைதளங்க ளில் அவதூறு பரப்புவோர் மீது  கடுமையான நடவடிக்கை மேற் கொண்டு மக்கள் ஒற்றுமையை இந்த  இக்கட்டான தருணத்தில் பாதுகாக்க வேண்டும் என்று தமிழக மக்கள் ஒற்றுமை மேடை வலியுறுத்துகிறது. தமிழக அரசும் காவல்துறை யும் உடன டியாக இத்தகைய விஷமக் கருத்துக் களைப் பரப்புவோர் மீது கடும் நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும் என மேடை வற்புறுத்துகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்கள்.