இந்துக்கள் பள்ளிக்கு வெளியே விபூதி, குங்குமம் அணிய அண்ணாமலை சொல்வாரா? என்று மார்க்சிஸ்ட் கட்சியின் அருணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரை மேலூர் அருகே அம்பலகாரன்பட்டி வல்லடிகாரர் கோயில் திருவிழாவில் கலந்து கொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசுகையில், “உண்மையான தேசியத்தையும், ஆன்மிகத்தையும் நம்புபவர்கள் பாஜகவில் இருக்கின்றனர்.
மாற்றுக் கட்சி என்ற வார்த்தையை நான் பயன்படுத்த மாட்டேன். என்னை பொறுத்தவரை இன்று பாஜகவில் இருப்பவர்கள், நாளை பாஜகவில் இணைய உள்ளவர்கள் அவ்வளவே. மத அடையாளங்களை பள்ளிக்குள் அணியாமல், பள்ளிக்கு வெளியே அணிந்து, உங்களது மதத்தை பேணிகாப்பாற்றுங்கள்” என்று அவர் கூறினார்.
இந்நிலையில், மார்க்சிஸ்ட் கட்சியின் பேராசிரியர் அருணன், இஸ்லாமிய பெண்கள் ஹிஜாபை பள்ளிக்கு வெளியே அணியட்டும், பள்ளியின் உள்ளே அனுமதிக்கக்கூடாது என மதவெறுப்பு பிரச்சாரத்தை கட்டவிழ்த்துள்ளார். அதுபோல, இந்து மாணவர்களை பள்ளிக்கு உள்ளே விபூதி, நாமம், குங்கும், மஞ்சள் கயிறு, ஐயப்பனுக்கான விரத உடை அணிய தடையும், அவற்றை பள்ளிக்கு வெளியே அணிய சொல்வாரா? என பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு, அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.