திருவண்ணாமலை தீபவிழா 4,764 சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடு
திருவண்ணாமலை, நவ. 18- திருவண்ணாமலை கார்த்திகை தீபவிழா 2025-க்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தலைமையில் செவ்வாயன்று நடைபெற்றது. முக்கிய ஏற்பாடுகள் தீபவிழாவை முன்னிட்டு, போக்கு வரத்துத் துறை சார்பில் 4,764 சிறப்புப் பேருந்துகள் 11,293 நடைகள் இயக்கப்பட உள்ளன. பயணிகளின் கூட்ட நெரிசல் ஏற்படும் நேரத்தில் இயக்க 40 ஸ்பேர் பேருந்துகள் தயார் செய்யப்பட்டுள்ளன. அருகாமை மாவட்டங்களிலிருந்து 200 தனியார் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. பக்தர்கள் தற்காலிகப் பேருந்து நிலை யங்கள் மற்றும் கிரிவலப் பாதை இடையே பயணிக்க 220 தனியார் பள்ளி, கல்லூரிப் பேருந்துகள் கட்டணமில்லாமலும், 180 மினி பேருந்துகள் ரூ. 10 குறைந்தபட்சக் கட்டணத்திலும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது இயக்கப்படும் 16 ரயில்களுடன் கூடுதலாக 16 சிறப்பு ரயில்கள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 2,000க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் சுழற்சி முறையில் பணிய மர்த்தப்பட உள்ளனர். கோவில் வளாகம் மற்றும் கிரிவலப் பாதையில் 97 மருத்துவக் குழுக்கள், 45 எண்ணிக்கையில் 108 அவசர ஊர்திகள், 5 பைக் ஆம்புலன்ஸ்கள் அமைக்கப்பட உள்ளன. நெடுஞ்சாலைத் துறை ஓய்வெடுக்கும் அறைகளில் இருதய சிகிச்சை உபகரணங்களுடன் மருத்துவக் குழுக்கள் ஏற்படுத்தப்பட உள்ளன.ரூ. 7.14 கோடி மதிப்பில் அம்மன் தேர் பழுது பார்க்கப்பட்டுள்ளது. ரூ. 15 கோடி செலவில் மாடவீதி கான்கிரீட் தளமாக மாற்றிய மைக்கப்பட்டு, ரூ. 6.41 கோடி மதிப்பில் மின் புதைவட கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் முன்னி லையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சட்ட மன்ற உறுப்பினர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். அனைத்துப் பணிகளையும் ஒருங்கிணைக்க, துணை ஆட்சியர்கள் தலைமையில் 21 ஒருங்கிணைப்புக் குழுக்கள் அமைக்கப் பட்டுப் பணிகள் கண்காணிக்கப் பட்டு வருகின்றன.
