டிஸ்புர் : அஸ்ஸாம் மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, பணியிலிருந்த தமிழக ராணுவ வீரர் உயிரிழந்தார்.
மதுரை மாவட்டம் , வில்லாபுரத்தைச் சேர்ந்தவர், ராணுவ வீரர் கதிர்வேல். இவர், அஸ்ஸாமில் ராணுவ பணியிலிருந்தார். அங்குக் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தார். இறந்த ராணுவ வீரரின் உடல், இன்று இரவு எட்டு மணியளவில் விமானம் மூலம் அவரின் சொந்த ஊருக்குக் கொண்டு வரப்படுகிறது.