tamilnadu

img

‘அரிசி’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

‘அரிசி’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.முத்தரசன், சமுத்திரகனி நடித்துள்ள ‘அரிசி’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இசை தகட்டை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பெற்றுக் கொண்டார். 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் மற்றும் கு.செல்வபெருந்தகை (காங்கிரஸ்), மு.வீரபாண்டியன் (சிபிஐ), தொல்.திருமாவளவன் (விசிக), காதர் மொகைதீன் (ஐயுஎம்எல்), பழ.ஆசைத்தம்பி (சிபிஐ(எம்எல்)எல்) உள்ளிட்ட தலைவர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டன்ர்.