tamilnadu

img

அரக்கோணம் முன்னாள் எம்.பி., காலமானார்

சென்னை:
அரக்கோணம் மக்களவைத் தொகுதி முன்னாள் உறுப்பினர் ஏ.எம்.வேலு வியாழனன்று (ஆக.13) காலமானார். அவருக்கு வயது 75.கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னை ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், கொரோனாவில் மீண்டாலும் நுரையீரல் தொற்று நோய் காரணமாக சிகிச்சை பலன் அளிக்காமல் மருத்துவமனையில் காலமானார்.

அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் இருந்து 1980-ல் காங்கிரஸ் சார்பிலும், 1996-ல் தமாகா காங்கிரஸ் சார்பிலும் இருமுறை நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.இவரது சகோதரர் ஏ.எம்.முனிரத்தினம் சோளிங்கர் சட்டபேரவைத் தொகுதியின் முன்னாள் உறுப்பினர் ஆவார்.