tamilnadu

img

சைகை மொழிபெயர்ப்பாளரை நியமித்திடுக மாற்றுத்திறனாளிகள் சங்க மாநாட்டில் தீர்மானம்

சைகை மொழிபெயர்ப்பாளரை நியமித்திடுக மாற்றுத்திறனாளிகள் சங்க மாநாட்டில் தீர்மானம்

திருவண்ணாமலை, நவ. 25 – தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் 5ஆவது மாவட்ட மாநாடு, செங்கம் துக்கப் பேட்டையில்  நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சி.ரமேஷ்பாபு தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டை ஆர். ஆறுமுகம் கொடியேற்றித் துவக்கி வைத்தார். மாவட்ட துணைச் செயலாளர் சந்திரசேகர், மாவட்டக் குழு உறுப்பினர் கே. நவாப் ஜான் ஆகியோர் பேசினர். மாநிலத் தலைவர் டி. வில்சன் துவக்க உரையாற்ற, மாவட்டச் செயலாளர் ஆர். சிவாஜி மற்றும் மாவட்டப் பொருளாளர் பி. சத்யா ஆகியோர் அறிக்கை வாசித்த னர். மருத்துவர் எம். ஸ்ரீதர், ப.செல்வன், ஏ. லட்சுமணன், பி. கணபதி, சி. எம். பிரகாஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி னர். மாநிலப் பொருளாளர் கே.ஆர். சக்கரவர்த்தி நிறைவுரை ஆற்றினார். தீர்மானம் அரசு அலுவலகங்களில் சைகை மொழிபெயர்ப்பாளர்களை நியமிக்க வேண்டும்,  மாதாந்திர உதவித்தொகை உயர்வு, அந்தியோதயா அண்ணா யோஜனா திட்டத்தில் 35 கிலோ அரிசி வழங்குதல், 100 நாள் வேலை திட்டத்தில் 4 மணி நேர வேலைக்கு முழு ஊதியம் வழங்குதல் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாகப் புதிய பேருந்து நிலையம் அம்பேத்கர் சிலை அருகில் இருந்து மாநாட்டு ஊர்வலம் நடைபெற்றது. நிர்வாகிகள் தேர்வு சி.ரமேஷ்பாபு தலைவராகவும், ஆர்.சிவாஜி செயலாளராகவும், பி. சத்யா பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்ட னர். மாவட்டக் குழு உறுப்பினர் கே. விஸ்வநாதன் நன்றி கூறினார்.