சென்னை:
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர திங்கள்கிழமையன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டது. பின்னர் மாணவர்களுக்கான மதிப்பெண் தசம அடிப்படையில் வழங்கப்ட்டது. இந்தநிலையில் பி.இ.,பி.டெக்., போன்ற பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு திங்கள் முதல் தொடங்குகிறது. பொறியியல் படிப்புகளில் சேர www.tneaonline.org என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 24 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 143 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர இன்று (திங்கள்) முதல் www.tngasa.org k‰W« www.tngasa.in என்ற இணையதளங்களில் விண்ணப்பம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.