சென்னை
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மாநிலத்தின் கொரோனா மையமாக உள்ள சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை சற்று இறங்குவரிசையில் பயணித்தாலும், மற்ற மாவட்டங்களில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக கிராமப்பகுதியிலும் கொரோனா வைரஸ் ஆதிக்கம் தலை தூக்கியுள்ள நிலையில், தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 4,985 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 1,75,678 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தின் பிற பகுதியில் இருந்து வந்த நபர்களில் 55 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று (திங்கள்கிழமை) ஒரே நாளில் 70 பேர் பலியாகிய நிலையில், மாநிலத்தின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,551 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 3,861 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், இதுவரை 1,21,776 பேர் கொரோனாவை வென்று இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். சிகிச்சையில் இன்னும் 51,348 பேர் உள்ளனர்.
தமிழகத்தில் மொத்த கொரோனா பரிசோதனை மையம் 112 ஆக அதிகரித்துள்ளது. அரசு சார்பு -57 ஆகவும், தனியார் சார்பு -55 ஆகவும் உள்ளது. கொரோனா அறிகுறிகளுடன் இன்று 52,087 மாதிரிகள் சோதனைக்கு வந்தன. இதில் 20,800 மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.