tamilnadu

img

160 குழந்தைகளைப் படுகொலை செய்து அமெரிக்கா - இஸ்ரேல் போர்க் குற்றம்!

160 குழந்தைகளைப் படுகொலை செய்து அமெரிக்கா - இஸ்ரேல் போர்க் குற்றம்!

ஈரான் வெளியுறவுத்துறை குற்றச்சாட்டு டெஹ்ரான், மார்ச் 3 - ஈரான் மீது படுமோசமான ராணு வத் தாக்குதலை அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்தி வருகின்றன. இதில், யுத்த நெறிமுறைகளை மீறி, பள்ளிக் கூடங்கள், மருத்துவ மனைகள் மீதும் குண்டுகளை வீசி, ஒன்றுமறியாத குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என அப்பாவி பொதுமக்களையும் கொன்று குவித்து வருகின்றன. ஈரானின் ரெட் கிரசண்ட் (Red Crescent) அமைப்பு வெளி யிட்டுள்ள புள்ளிவிவரங்கள் படி அந்நாடு முழுவதும் 153 நகரங்கள், 504 இடங்கள் அமெரிக்க - இஸ்ரேல் படைகளால் 1,039 முறைக்கு மேல்   தாக்கப்பட்டுள்ளன. இந்தத் தாக்கு தல்களில் இதுவரை 787 பேர் படு கொலையாகியுள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இதில், ஹோர்மோஸ்கான் மாகாணத்தில் உள்ள ஒரு ஆரம்பப் பள்ளி மீது குண்டு வீசப்பட்டதில் மட்டும் 165 குழந்தைகள் பலியாகின. உடல் சிதறி படுகொலையான அந்த பிஞ்சுக் குழந்தைகளின் இறுதி ஊர்வலம், செவ்வாய்க்கிழமை காலை கொல்லப்பட்ட குழந்தை களின் புகைப்படங்கள் மற்றும் சிறிய சவப்பெட்டிகளை ஏந்தியபடி நடைபெற்றது. அனைத்து குழந்தைகளையும் ஒரு இடத்தில் புதைப்பதற்காக 165 கல்லறைகளுக்கான குழிகள் தோண்டப்பட்டிருந்தன. இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.  அதேபோல, ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள காந்தி மருத்துவமனை மீதும் அமெரிக்கா - இஸ்ரேல் ராணுவம் குண்டுகளை வீசின.  இலக்குகளைத் துல்லியமாக தாக்கும் மேம்பட்ட தொழில்நுட்ப அமைப்புகளை வைத்திருப்பதாக இஸ்ரேல் - அமெரிக்கா கூறிக் கொண்டாலும், தெரிந்தே பள்ளி, மருத்துவமனைகள், ஊடக நிறுவனங்கள் மீது தாக்குதல்களை நடத்துகின்றன. இவை ஒரு போர்க்குற்றம் மற்றும் மனிதநேயத்திற்கு எதிரான குற்றமாகும்.  இத்தகைய கொடூரங்களுக்கு எதிராக எந்தவொரு பொறுப்புள்ள நாடும் அமைதியாக இருக்க முடி யாது என ஈரான் வெளியுறவுத்துறை கண்டித்துள்ளது. அதேபோல ஹோர்மோஸ்கான் மாகாணத்தில் கொல்லப்பட்ட 165 குழந்தைகள் தொடர்பான புகைப்படத்தை தனது சமூக ஊடக கணக்கில் வெளியிட்டு, ஈரான் வெளி யுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி வேதனை தெரிவித்துள்ளார். ஈரானை மீட்கப் போகிறோம் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறினார். குழந்தைகள் மீது குண்டு வீசுவதுதான் மீட்பு நடவடிக்கையா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.