தமிழ்நாட்டில் தனி வீடுகளுக்கான கட்டட விதிகளில் திருத்தம் செய்து வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு 2025 அக்டோபரில் வெளியிட்ட புதிய பொது கட்டட விதிமுறைகள் திருத்தத்தின் படி, 3,300 சதுர அடி வரையிலான தனி வீடுகளில் 2 கார்கள், 2 இருசக்கர வாகனங்கள் நிறுத்த இடம் ஒதுக்குவது கட்டாயம்; 3,300 சதுர அடிக்கு மேற்பட்ட தனி வீடுகளில் 4 கார்கள், 4 இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் அமைப்பது கட்டாயம்.
இதற்கு முன்னர், கார் நிறுத்துமிடம் தொடர்பான விதிகள் பெரும்பாலும் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு மட்டும் பொருந்தி வந்த நிலையில் தற்போது தனி வீடுகளுக்கும் அவசியமாக்கப்பட்டுள்ளது.
மேலும் அடுக்குமாடி குடியிருப்பில் இணையதள சேவை, தொலைத்தொடர்பு வசதி கட்டமைப்பை ஏற்படுத்துவதும் அவசியமாக்கப்பட்டுள்ளது.