tamilnadu

img

அனைத்துதுறை ஓய்வூதியர்கள் தர்ணா

அனைத்துதுறை ஓய்வூதியர்கள் தர்ணா

வின் பரிந்துரைகளிலிருந்து ஓய்வூதியர்களை நீக்கி வைக்கும் சட்டம்,  ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று சட்டம், 4 தொழிலாளர் தொகுப்புகளை ரத்து செய்ய  வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி செவ்வாயன்று (ஜூலை 15) கோரிக்கை நாளாக அகில இந்திய மாநில அரசு ஓய்வூதியர் சம்மேளனம் கடை பிடித்தது. இதனையொட்டி தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் மாநிலம் முழுவதும் தர்ணா நடை பெற்றது. அதன் ஒருபகுதியாக நந்தனத்தில்  உள்ள ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் முன்பு தர்ணா நடைபெற்றது. சங்கத்தின் சென்னை மாவட்டத் தலைவர் பி.எஸ்.அப்பர் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மாநில துணைத் தலைவர் கி.இளமாறன், மாநிலச் செயலாளர்கள் ம.நாதன், பி.மகேஸ்வரி, மாவட்டச் செயலாளர் என்.ராமசாமி, பொரு ளாளர் ஜெ.பட்டாபி, துணைத் தலைவர் எம்.காதர், அகில இந்திய ஓய்வுபெற்ற கணக்கு  மற்றும் தணிக்கை அதிகாரிகள் சங்கத்தின்  ஒருங்கிணைப்பாளர் எஸ்.மோகன், அரசு ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பின் சென்னை மாவட்டச் செய லாளர் என்.கிருஷ்ணமூர்த்தி, ஓய்வு பெற்ற  பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் நலச்சங் கத்தின் சென்னை மாவட்ட பொருளாளர் கு.பூபாலன் உள்ளிட்டோர் பேசினர் வேலூர் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை  ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் மாவட்டத்  தலைவர் எம்.பன்னீர்செல்வம்  தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு அனைத்து துறை ஓய்வூதியர்  சங்க மாநில பொதுச் செயலாளர்  பி.கிருஷ்ணமூர்த்தி சிறப்புரையாற்ற மாவட்ட செயலாளர் பா.ரவி கோரிக்கை விளக்க உரையாற்றினார். ஓய்வூதியர் ஒருங்கிணைப்பு குழுவின் மாவட்ட செயலாளர் பி.லோகநாதன், தபால்  துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர்  ஏ.கதிர் அகமது, அகில இந்திய ஓய்வூதியர் சங்க மாநில தலைவர் சி.ஞானசேகரன் தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நல சங்க மாவட்ட அமைப்பாளர் செ. நா.ஜனார்த்தனன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். முடிவில் மாவட்ட துணைத் தலை வர் சா.ஜெயச்சந்திர பாக்யராஜ் நன்றி கூறினார்.