அகில இந்திய இந்து மகாசபா தலைவர் ‘கோடம்பாக்கம் ஸ்ரீ’ என அறியப்படும் ஸ்ரீகந்தன் மீது போக்சோ வழக்கில் நடவடிக்கை எடுத்து போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோடம்பாக்கத்தைச் சேர்ந்த ஸ்ரீகந்தன், அகில இந்திய இந்து மகாசபாவின் தலைவராக உள்ளார். இவரது வீட்டில் பணியாற்றி வந்த பெண், தனது சகோதரரின் பள்ளி மாணவியான மகளையும் அடிக்கடி அவருடைய வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
இந்த நிலையில், 2021 முதல் 2023 வரை பலமுறை அந்த பெண்ணின் துணையுடன் சிறுமியை ஸ்ரீகந்தன் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார்.
உண்மையறிந்த சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் தியாகராயநகர் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டம் மற்றும் பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து ஸ்ரீகந்தனை கைது செய்தனர். ஏற்கனவே இவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.