தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது.
தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று (அக்.14) முதல் அக்.17-ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கிய கூட்டத்தில், முன்னாள் உறுப்பினர்களின் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் புரட்சிமணி, குணசேகரன், கோவிந்தசாமி, அமர்நாத், அறிவழகன், ராமலிங்கம், கலுலுர் ரஹ்மான், சின்னசாமி மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. தொடர்ந்து.கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இதைடுத்து அவை உறுப்பினர்கள் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.
இதை தொடர்ந்து, கேரளத்தின் முன்னாள் முதலமைச்சர் வி.எஸ்.அச்சுதானந்தன், ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் சிபு சோரன், நாகாலாந்து முன்னாள் ஆளுநர் இல கணேசன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர் பீலா வெங்கடேசன் உள்ளிட்டோரின் மறைவுக்கும், சட்டப்பேரவை உறுப்பினர் டி.கே.அமுல் கந்தசாமி மறைவுக்கும் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இதை தொடர்ந்து சட்டப்பேரவை நாளை காலை 9.30 மணிக்கு ஒத்துவைக்கப்பட்டது.