சென்னை, ஜூன் 2-ஒரு மாத கால கோடை விடுமுறைக்குப் பின்னர் உயர்நீதிமன்றம் திங்கள்கிழமையன்று மீண்டும் திறக்கப்படுகிறது.சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரைகிளைக்கு கடந்த மே மாதம் 1-ஆம் தேதி முதல் ஜூன் 2-ஆம் தேதிவரை கோடை விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்த கோடைகாலத்தில் அவசர வழக்குகளை விசாரிக்க ஏதுவாக சென்னைஉயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் சிறப்பு அமர்வுகள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில்,ஒரு மாத கால விடுமுறைக்குப் பின்னர் ஜூன் 3 திங்கள்கிழமையன்று உயர்நீதிமன்றம் மீண்டும் திறக்கப்பட உள்ளது.சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜூன் 3-ஆம் தேதி முதல்8-ஆம் தேதி வரையிலான முதல் வாரத்தில் முன்னாள் முதல்வர்ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க தனியாக ஒருநிர்வாகியை நியமிக்கக் கோரி தொடரப்பட்டுள்ள வழக்கு,அரசு மருத்துவக் கல்லூரிகளில் இணைப் பேராசிரியர் பதவிஉயர்வுக்கான கலந்தாய்வுக்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்டுள்ள வழக்கு, கோயம்பேடு சந்தையில் உள்ளகடைகளை அதிக வாடகைக்கு ஏலம் விடுவதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.