tamilnadu

img

தமிழகம் முழுவதும் 24 மணிநேர தடுப்பூசி மையங்கள் இன்று திறப்பு...

சென்னை:
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் செயல்படும் கொரோனா தடுப் பூசி மையங்கள் திங்களன்று திறக்கப்படவுள்ளன.சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில்  24 மணிநேரமும் கோவிட் 19 தடுப்பூசி செலுத்திடும் மையத்தினை மக் கள் நல்வாழ்வுத்துறை அமைச் சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர் களிடம் பேசிய அவர்,  முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி மாற்றுத் திறனாளிகளுக்கு வீடுகள்தோறும் சென்று தடுப்பூசி போடும் பணி, மலைவாழ் கிராமங் களில் உள்ள மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெறுகிறது.   புதுக்கோட்டை மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்துவதில் 100 சதவிகிதம் தன்னிறைவு அடையப் பட்டுள்ளது.  அதே போல் அரியலூர் மாவட்டத்தில் 100 சதவிகிதம் தடுப்பூசிகள் கர்ப்பிணித் தாய் மார்களுக்கு செலுத்துப் பட்டுள்ளது.  

சுற்றுலாத் தலங்களில் தடுப்பூசி
சுற்றுலா மையங்கள், ஆன் மீக சுற்றுலாத் தலங்களில் தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவுப்படுத்த மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. கொடைக்கானலில் தடுப்பூசி 100 சதவிகிதம் போடப்பட்டுள்ளது. பழனியில் 98 சதவிகிதம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மிக விரைவில் 100 சதவிகிதத்தை எட்டும் நிலையில் உள் ளது. அதே போல்  திருவண்ணாமலை, இராமேஸ்வரம், நாகூர் போன்ற ஆன்மீக சுற்றுலாத் தலங்களில் 100 சதவிகிதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதே போல் 60க்கும் மேற்பட்ட கிராமங்களில் 100 சதவிகிதம் தடுப்பூசி போடும் பணி நிறைவடைந்துள்ளது.தமிழ்நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி செலுத்திடும் பணி திங்கட் கிழமை (ஆக.23) தொடங்கவிருகிறது.

குறிப்பாக 37 மாவட்டங்களிலும் 24 மணிநேரமும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்க இருக்கின்றன. சென்னையைப் பொறுத்தவரைராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனை, ஓமந்தூரார் அரசுமருத்துவமனை, ராயப்பேட்டைஅரசு பொதுமருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லூரிமருத்துவமனை மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனைகளிலும் 24 மணிநேரமும் தடுப்பூசி போடும் பணிதொடங்கவுள்ளது.அன்றைக்கே அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் 24 மணி நேர தடுப்பூசி  திட்டம் தொடங்கப்படவிருக்கிறது. மருத் துவக் கல்லூரி இல்லாத மாவட் டங்களிலும் குறிப்பாக மயிலாடுதுறை, பெரம்பலூர் போன்ற மாவட்டங்களிலும் 24 மணிநேரமும் தடுப்பூசிகள் செலுத்தப்படவிருக்கிறது. அனைத்து மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளிலும் 24 மணிநேரமும் தடுப்பூசிகள் செலுத்தப்படவிருக்கிறது.இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்தார்.