tamilnadu

பாசனத்திற்காக  வீடூர் அணை இன்று திறப்பு

விழுப்புரம்.டிச.29- விழுப்புரம் மாவட்டம், வீடூர் அணையிலிருந்து பாசனத்துக்காக திங்கள்கிழமை (டிச.30) முதல் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.  தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியின் உத்தரவின்பேரில், திங்கள்கிழமை (டிச.30) காலை 9 மணிக்கு விழுப்புரம் அருகே உள்ள வீடூர் அணையிலிருந்து பாசனத்துக்காக அணை திறக்கப்படுவதன் மூலம் விழுப்புரம் மாவட்டத்துக்கு உட்பட்ட சிறுவை, வீடூர், பொம்பூர், பொன்னம்பூண்டி, கோரக்கேணி, ஐவேலி, நெமிலி, எறையூர், தொள்ளாமூர், கடகம்பட்டு, கொண்டலாக்குப்பம் ஆகிய கிராமங்களில் உள்ள சுமார் 2,200 ஏக்கர் விவசாய நிலங்களும், புதுவை மாநிலத்துக்கு உட்பட்ட 1,000 ஏக்கர் விவசாய நிலங்களும் பாசன வசதி பெறும். டிச.30-ஆம் தேதி முதல் வருகிற மே.12-ஆம் தேதி வரை 135 நாட்களுக்கு தேவைக்கேற்ப தண்ணீர் திறந்து விடப்படும் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணா துரை அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.