ஆதம்பாக்கம் நீர்வழி துளிர் இரவுப்பள்ளி-மேரி கியூரி துளிர் இல்லம் சார்பில் 4வது ஆண்டாக சமத்துவப் பொங்கல் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பற்ற குழந்தைகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பரிசுகளை வழங்கி பேசினார். கல்வியாளர் மாடசாமி, தமிழ்நாடு அறிவியல் இயக்க நிர்வாகிகள் உதயன், சக்திவேல், இரவுப்பள்ளி மேலாளர் ரீடா, குடியிருப்போர் நலச்சங்கத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, ராஜாராம் மோகன்ராய் அறக்கட்டளை நிர்வாகி ராமசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.