சென்னை, ஜூலை 2- சென்னையில் மேற் கொள்ளப்படும் பரிசோத னைகளில் 20 சதவீதம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படு வதாக மாநகராட்சி ஆணை யர் பிரகாஷ் தெரிவித்தார். தேனாம்பேட்டை மண்ட லத்தில் காய்ச்சல் முகாம் களை ஆய்வு செய்தபின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சென்னையில் நாளொன் றுக்கு 35 ஆயிரம் பேர் தனி மைபடுத்தப்படுகிறார்கள். பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, தனிநபர் இடை வெளி பின்பற்றுவதோடு, மாநகராட்சி ஊழியர்க ளுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். ஒத்து ழைத்தால் மட்டுமே கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும். கடந்த 15 நாட்களில் 1.50 லட்சம் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதில் 20 சதவீதம் பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனை மேலும் பரவ விடா மல் தடுத்து வருகிறோம். சென்னையில் 4 ஆயிரத் திற்கும் மேல் தினசரி பாதிப்பு இருந்தால் கட்டுக்குள் வராத நிலைக்கு போய்வி டும். முழு ஊரடங்கு முடிவ தற்குள் சுமார் 30 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட லாம். மழைக்காலம் தொற்று பரவலை கட்டுப்படுத்த கூடு தல் சவாலாக இருக்கும். மழை தொடங்கிவிட்டால் ஊழியர்கள் விரைவில் பணிக்கு வர முடியாது. ரோல் கால் தடைபடும். டெங்கு உள்ளிட்ட தொற்று நோய்கள் அதிகரிக்கும். இவற்றை எதிர்கொள்ளவும் திட்டமிட்டு வருகிறோம். இவ்வாறு அவர் கூறி னார்.