tamilnadu

img

அடிப்படை வசதியின்றி வாழும் பழங்குடி மக்கள்

சிதம்பரம், மே 22- கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வடக்கு தில்லை நாயகபுரம் கிராமத்தின் அருகே நஞ்சாங்குட்டை என்ற இடத்தில் கடந்த 50 ஆண்டுகளாக 21 பழங்குடி சமூகத்தை சார்ந்த குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில் 3 குடும்பங்களுக்கு மட்டுமே ரேசன் கார்டு உள்ளது. மற்ற வர்களுக்கு ரேஷன் கார்டு  இல்லாததால் அரசின் நிவா ரண பொருட்களை வாங்க  முடியாத நிலை. ரேசன் கார்டு கேட்டு அரசுக்கு பலமுறை  மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என அப்பகுதி மக்கள் கூறினார்கள். ஆனால் இந்த 21 குடும்பத்திலுள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு உள்ளது. குடிநீர், சாலை உள்ளிட்ட எந்த  அடிப்படை வசதிகளும் இந்த மக்களுக்கு செய்து கொடுக்கப்  படவில்லை. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், எங்க ளுக்கு மாற்று இடம் வழங்கி வீடு கட்டி கொடுக்க வேண்டும்,  கொரோனா பாதிப்பால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும்  எங்கள் அனைவருக்கும் அரசு நிவாரணம் உள்ளிட்ட ரேஷன்  பொருட்களை வழங்க வேண்டும் என்றனர்.